உரக்கடை மேற்கூரையை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள உரக்கடையின் மேற்கூரை உடைந்து கிடப்பதைக் கண்டு கடைக்காரர் அதிர்ச்சியடைந்தார்.
பணம் கொள்ளை.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் உரக்கடை மேற்கூரையை உடைத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உரக்கடையின் மேற்கூரை உடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை தீத்தாம்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 34). இவர் கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உரக்கடை நடத்தி வருகிறார். அவர் நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ரூ.30 லட்சம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மேலும் உரக்கடைக்குள் இருந்த பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. மானாவாரி விவசாயத்திற்காக பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட அந்தத் தொகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X