

சென்னை,
தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தில் (டாஸ்மாக்) 6,715 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரம் விற்பனையாளர்கள் மற்றும் 3,090 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24,805 சில்லரை விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இந்த நிலையில் ரூ.500 சம்பள உயர்வு போதுமானது அல்ல என்றும், சம்பள உயர்வை அதிகரிக்க கோரி வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.