நோட்டா வாக்குகள்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆதங்கம்

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சரியான வேட்பாளருக்கு வாக்களிப்பது நமது கடமை என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பிறகு மோகன் பகவத் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -ஜனநாயக அமைப்பில், அரசை தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிப்பது அவசியம், எனவே இது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சரியான வேட்பாளருக்கு வாக்களிப்பது நமது கடமை.
இது இன்றைய முதல் கடமை, அதனால்தான் நான் முதலில் வரிசையில் நின்று வாக்களித்துள்ளேன். நோட்டாவை ஆதரிப்பது மறைமுகமாக தேவையற்ற வேட்பாளர்களை ஊக்குவிக்கிறது. தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக நோட்டா வழங்கப்பட்டு இருந்தாலும் இருக்கும் வேட்பாளர்களில் சிறந்தவர்களை தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story






