சாலையில் இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற ஆர்.டி.ஓ. உத்தரவு

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்காக சாலையில் இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என திரையரங்க உரிமையாளருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.
சாலையில் இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற ஆர்.டி.ஓ. உத்தரவு
Published on

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், செந்துறை, அரியலூர், ஆண்டிமடம் பகுதிகளில் உள்ள 4 திரையரங்குகளில் விஜய் நடித்த லியோ திரைப்படம் நேற்று வெளியானது. இதில் ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டு எடுத்து சென்று படத்தை பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் திரைப்படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் தளபதி, தளபதி என கோஷம் எழுப்பியவாறு ஆரவாரத்துடன் வெளியே வந்தனர்.

இந்தநிலையில் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் தலைமையில் தாசில்தார் துரை உள்ளிட்ட அதிகாரிகள் திரையரங்க உரிமையாளரை சந்தித்தனர். அப்போது ரசிகர்கள் பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் பெரிய அளவில் வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் டிக்கெட் விற்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்து சென்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com