கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வரும் 5-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகின்றது. மேலும் ஜிகா வைரஸ் தொற்று பரவும் அங்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

கேரளாவில் வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு பரிசோதனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:-

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில், தெர்மல் ஸ்கீரினிங் மற்றும் ஆர்டிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலைத்தில் 13 நிமிடத்தில் கொரோனா சோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை விரைவில் அமலாக உள்ளது.

மக்கள் நலனுக்காகவே அதிக கூட்டம் கூடும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகளுக்கு, வரும் 5-ஆம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயப்படுத்தப்படும். இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினாலும் தமிழகத்திற்குள் வரலாம்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com