15 ஆண்டுகளுக்குப் பிறகு ரப்பர் விலையில் புதிய உச்சம் - விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த 2010-ம் ஆண்டு கிலோ ரூ.255 என்ற உச்சத்தைத் தொட்டது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு ரப்பர் விலையில் புதிய உச்சம் - விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

நாகர்கோவில்,

இந்தியாவில் கேரள மாநிலமும், தமிழகத்தில் குமரி மாவட்டமும் ரப்பர் சாகுபடியில் முதன்மையாக இருக்கிறது. குமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 25 ஆயிரம் ஹெக்டரில் ரப்பர் சாகுபடி நடைபெறுகிறது. பொதுவாக ரப்பரின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்துள்ளது. அதாவது கடந்த 2010-ம் ஆண்டு கிலோ ரூ.255 என்ற உச்சத்தைத் தொட்டது. பிறகு மீண்டும் 200-க்கும் கீழ் வந்தது.

புதிய உச்சம்

15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ரப்பரின் விலை புதிய உச்சத்தை தொட்டது. கிலோ ரூ.275 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. ரப்பரின் இந்த விலை உயர்வுக்கு உலக அளவில் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள விற்பனை புரட்சி, போர் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் மற்றும் முக்கிய ரப்பர் உற்பத்தி நாடுகளான தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தியாவில் ரப்பருக்கான உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணம் என கூறப்படுகிறது.

இந்த விலையேற்றம் விவசாயிகள் மத்தியில் தித்திப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com