கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்: சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு

பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கால்நடைகளை லாரிகள் மூலம் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சென்னை ஐகோர்ட்டு வகுத்து, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது, அவை நிற்க போதுமான இடவசதி இருக்க வேண்டும். முறையான காற்று வசதி, உணவு, குடிநீர் ஆகியவை கால்நடைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

கால்நடைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை மருத்துவ பரிசோதனை செய்த பிறகே லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும். முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கூடிய வழக்கில், இந்த விதிமுறைகளை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கோரிய வழக்கையும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com