ரூ.2½ கோடிக்கு பருத்தி விற்பனை

கும்பகோணத்தில், ரூ.2½ கோடிக்கு பருத்தி விற்பனை நடந்தது.
ரூ.2½ கோடிக்கு பருத்தி விற்பனை
Published on

கும்பகோணம்;

கும்பகோணத்தில், ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை நடந்தது.

பருத்தி ஏலம்

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி தலைமையில், மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து பருத்தி விவசாயிகள் 3 ஆயிரத்து 647 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர்.கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ரூட்டி, விழுப்புரம் சேலம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்தனர்.

ரூ.2.55 காடி

இதில் பருத்தி அதிகபட்ச விலையாக ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 552-க்கும் , குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 619- ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் எடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.2.55 கோடி என ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com