

சென்னை
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு ஊரக பகுதிகளில் (சென்னை மாவட்டம் தவிர்த்து) 9-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு 6-12-2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. இத்தேர்வின் மதிப்பெண் விவரங்கள் 20-1-2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணாக்கர்கள் (50 மாணவியர், 50 மாணவர்) தெரிவுப்பட்டியல் இன்று (5-3-2026) வெளியிடப்படுகிறது.
இந்த ஊக்க தொகைக்கான தெரிவுப்பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Other Examinations தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு முடிவுகள் என்ற பக்கத்தில் கண்டறியலாம். மேலும், இத்தெரிவு பட்டியல், மாணவ, மாணவியரின் தகுதி குறித்து பள்ளிக்கல்வி இயக்ககத்தால் உறுதி செய்யப்பட்டு பின்னரே பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.