ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Published on

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஜேம்ஸ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையத் பயாஸ் அகமத், சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் உமாசங்கர், இணை செயலாளர் முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com