ஊரக உள்ளாட்சி தேர்தல்; வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.
ஊரக உள்ளாட்சி தேர்தல்; வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்
Published on

சென்னை,

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி, 9-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இதில் 5-வது நாளான நேற்று கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 24 ஆயிரத்து 607 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6 ஆயிரத்து 864 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 298 வேட்புமனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 202 வேட்புமனுக்களும் என 33 ஆயிரத்து 971 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41 ஆயிரத்து 27 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 ஆயிரத்து 107 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 683 வேட்புமனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 228 வேட்புமனுக்களும் என 54 ஆயிரத்து 45 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com