சபரிமலை ஐயப்பன் கோவில்; தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேரள மாநில முதல்-அமைச்சரிடம் பேசி, தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.
சபரிமலை ஐயப்பன் கோவில்; தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சபரிமலை ஐயப்பன் கோவிலில், போதுமான முன்னேற்பாடுகள் செய்யாமல் வழிபடச் செல்லும் பக்தர்களை வெகு நேரம் காத்திருக்க வைப்பதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி, முறையான வரிசையில் வழிபட அனுமதிக்காமல், வேண்டுமென்றே பக்தர்களைச் சிரமத்திற்குள்ளாக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் இந்தப் போக்கு கவலைக்குரியது.

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற நிலையில், தமிழக அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

உடனடியாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேரள மாநில முதல்-அமைச்சரிடம் பேசி, தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com