

சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நாளை திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கவர்னர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில். கவர்னர் மாளிகை தரப்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் மீண்டும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.