ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு


ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
x

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் பட்டியல் இன்று வெளியாகியிருக்கிறது. மொத்தம் 24 மொழிகளில் 21 மொழிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள் மற்றும் ஒரு நாடகம் ஆகியவற்றுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வரலாற்றுப் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908 என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.

ஆ.இரா.வேங்கடாசலபதி தமிழகத்தின் ஆய்வாளர்களுள் ஒருவர். இவர், புதுமைப்பித்தனின் எழுத்துக்களைச் செம்பதிப்பாகத் தொகுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் வரலாற்று, பண்பாடடுத்துறைக்கு முக்கியமான 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story