எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது - இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வாழ்த்து

தமிழ்ச்செல்வனின் “தமிழ் சிறுகதைகள் தடங்கள்” படைப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது - இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வாழ்த்து
Published on

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ் படைப்புலகில் தனி முத்திரை பதித்து வரும் மூத்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் “தமிழ் சிறுகதைகள் தடங்கள்” படைப்புக்கு 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட போதும், பல்வேறு இடையூறுகளால் தடைபட்டு, தாமதப்பட்ட போதும், ச.தமிழ்ச்செல்வனின் இரண்டாண்டு கால உழைப்பும், 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆழ்ந்து வாசித்து, அதன் கால ஓட்டத்தோடு கலந்து ஆய்வு மற்றும் விமர்சனக் கண்ணோட்டத்தில் “தமிழ் சிறுகதையின் தடங்கள்” யாரும் மறுக்க முடியாத பதிவாக அமைந்துள்ளது.

எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் மதிப்புறு தலைவர் என்ற சிறப்புக்குரியவர். ஏராளமான கட்டுரைகளையும், “வெயிலோடு போய்”, “வாளின் தனிமை” போன்ற புகழ் மிக்க படைப்புகளை வழங்கியுள்ளார். இவரது படைப்பு திரைப்படமாகயிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்றையும், அதன் புகழார்ந்த போராட்டப் பாரம்பரியத்தையும் சில ஆண்டுகளாக ஆய்வு செய்து “அடித்தால் திருப்பி அடி” என்ற பெருநூல் படைத்து வழங்கியுள்ளார். அதுவும் விருதுகளை வெல்லும் ஆற்றல் கொண்டது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com