பாய்மர படகு போட்டி

தொண்டியில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது.
பாய்மர படகு போட்டி
Published on

தொண்டி,

தொண்டியில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது.

பாய்மர படகு போட்டி

தொண்டியில் ஆடி மாத பொங்கல் விழா மற்றும் மீனவ சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தி நேற்று பாய்மர படகு போட்டி நடைபெற்றது. தொண்டி இந்து தர்ம பரிபாலன மகாசபை தலைவர் எல்.ஆர்.சி. ராஜசேகர் தலைமை தாங்கினார். மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளை தொழிலதிபர் எல்.ஆர்.சி. சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 37 பாய்மர படகுகள் போட்டியில் கலந்து கொண்டன. முதல் பரிசு ரூ.50 ஆயிரத்து ஒன்றை தொண்டி புதுக்குடி கருப்பையா, இரண்டாவது பரிசு ரூ.35 ஆயிரத்து ஒன்றை மோர் பண்ணை ஈஸ்வரன், மூன்றாவது பரிசு ரூ.25 ஆயிரத்து ஒன்றை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் புதுக்குடி குணா தனுஸ்ரீ, நான்காவது பரிசு ரூ.15 ஆயிரத்து ஒன்றை பாசி பட்டினம் முத்துக்காளி, ஐந்தாம் பரிசு ரூ.10 ஆயிரத்து ஒன்றை தொண்டி புதுக்குடி காவடி ராஜா ஆகியோரது படகுகள் பெற்றன.

குவிந்த பொதுமக்கள்

இந்நிகழ்ச்சியில் தொண்டி கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், தனிப்பிரிவு தலைமை காவலர் இளையராஜா, தொண்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி ராஜசேகர், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ஆனந்த், தொண்டி வன்னியர் படையாச்சி சமூகத்தினர், மீனவ கிராம நிர்வாகிகள், எல்.ஆர். சின்னத்தம்பி குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படகு போட்டியை காண தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் குவிந்திருந்தனர். இதனையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு படகிற்கு ஆறு பேர் வீதம் கலந்து கொண்டு காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல் படகுகளை இயக்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com