அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு

அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு

30,000-க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published on

சென்னை,

அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.500 முதல் ரூ.1,500 வரை ஊதியத்தை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் 30,000-க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ரேஷன் கடை ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் ஆகியோருக்கும் ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com