டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் சம்பள உயர்வு

மேற்பார்வையாளர்களின் மாத ஊதியம் ரூ.22,313-ல் இருந்து ரூ.33,023 ஆக உயர்கிறது.
டாஸ்மாக்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கான மாதாந்திர ஒருங்கிணைந்த ஊதி யம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மாத ஊதியம்

இதன்படி, மேற்பார்வையாளர்களின் மாத ஊதியம் ரூ.22,313-ல் இருந்து ரூ.33,023 ஆக உயர்கிறது. விற்பனையாளர்களின் மாத ஊதியம் ரூ.19,413-ல் இருந்து ரூ.30,284 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. உதவி விற்பனையாளர்களின் மாத ஊதியம் ரூ.17,925-ல் இருந்து ரூ.28,680 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் சம்பள உயர்வு கிடைக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com