

சேலம்,
சேலம், ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது போலியானது மற்றும் உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பன போன்ற உணவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த 11 மாதத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வுக்காக சென்னை மற்றும் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தரமற்ற கலப்பட உணவு பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 85 நிறுவனங்கள் மீது சேலம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.14.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.