ரூ.18½ லட்சத்திற்கு பருத்தி விற்பனை

கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.18½ லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
ரூ.18½ லட்சத்திற்கு பருத்தி விற்பனை
Published on

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பருத்தி சந்தை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கச்சிராயப்பாளையம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 80 விவசாயிகள் 603 பருத்தி முட்டைகளை விற்பனைக்காக வாரச்சந்தைக்கு கொண்டு வந்தனர். திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டி பருத்தி வாங்கினர். இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி முட்டைகளை ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.6,900-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,338-க்கும் விற்பனையானது. இதன் மூலம் மொத்தம் ரூ.18 லட்சத்து 70 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இந்த தகவலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com