ரூ.32½ லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கள்ளக்குறிச்சி சந்தையில் ரூ.32½ லட்சத்துக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.
ரூ.32½ லட்சத்துக்கு பருத்தி விற்பனை
Published on

கள்ளக்குறிச்சி,கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று பருத்தி சந்தை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற பருத்தி சந்தைக்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 236 விவசாயிகள் 1,316 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு சென்றனர். திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி, கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு பருத்திகளை கொள்முதல் செய்தனர். இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.8,269-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 6,489-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக 6,299-க்கும், குறைந்தபட்சமாக 4,099-க்கு விற்பனையானது. இதன் மூலம் மொத்தம் ரூ.32 லட்சத்து 53 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இந்த தகவலை கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com