ரூ.37½ லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.37½ லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
ரூ.37½ லட்சத்துக்கு பருத்தி விற்பனை
Published on

கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற பருத்தி சந்தையில் விற்பனைக்காக 265 விவசாயிகள் மொத்தம் 1,330 பருத்தி மூட்டைகளை கொண்டு சென்றனர். அதனை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர். இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.8,069-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,593-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.6,219-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4,290-க்கும் விற்பயைனது. இதன் மூலம் மொத்தம் ரூ.37 லட்சத்து 24 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இந்த தகவலை கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com