பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்

பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.
பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்
Published on

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அரசு தினசரி சந்தையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சந்தையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான ஆவுடையானூர், மேலப்பாவூர், கீழப்பாவூர், சாலைப்புதூர், திரவியநகர், மருதடியூர், திப்பணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டதால் விற்பனை மும்முரமாக நடந்தது. ஆடுகளை வாங்குவதற்காக கடையம், பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், ரகுமானியாபுரம், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, சுரண்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் வந்தனர். ஒவ்வொரு ஆடுகளின் மதிப்பும் ரூ.6 ஆயிரத்தில் இருந்து தொடங்கி ரூ.25,000 வரை விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com