

விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரிவிநாயகம் மற்றும் போலிசார் சுங்கச்சாவடி அருகே ஜவர்கர்லால்(வயது 50) என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.
அப்போது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த புகையிலை பொருட்களை கைப்பற்றி, கடைக்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் ஜவர்கர்லால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.