

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் தலைமை தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி முதல் விற்பனையை தபால் அதிகாரி அய்யாதுரை நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தபால் ஊழியர்கள் ஆறுமுகப்பெருமாள், நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலக பணியாளர்கள் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகப் பணியாளர்கள் உள்பட பலர் தேசியக்கொடிகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஒரு கொடியின் விலை ரூ.25 ஆகும். இங்கு 2 ஆயிரம் கொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தபால் அதிகாரி தெரிவித்தார்.