விவசாயிகளுக்கு தேவையான நெல் ரகங்கள் விற்பனை

விவசாயிகளுக்கு தேவையான நெல் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு தேவையான நெல் ரகங்கள் விற்பனை
Published on

குமுளூர் வேளாண் கல்வி நிறுவன முதல்வர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் திருச்சி குமுளூரில் உள்ள வேளாண்மை கல்வி நிறுவனம், விவசாயிகளுக்கு உதவும் வகையில் தரமான நெல் விதை ரகங்களை உற்பத்தி செய்து திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கும் மற்றும் நெல் பயிரிடும் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் விற்பனை செய்து வருகிறது. தற்போது விவசாயிகள் சம்பா பருவத்தில் நெற்பயிர் செய்ய தேவையான விதை நெல் ரகங்கள், வேளாண்மை கல்வி நிறுவனத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நெல் ரகங்கள் வெள்ளை பொன்னி ஆதார விதை 19,980 கிலோ (கிலோ ரூ.44), திருச்சி -3 உண்மை நிலை விதை 5,330 கிலோ (கிலோ ரூ.31), திருச்சி -5 உண்மை நிலை விதை 1,980 கிலோ (கிலோ ரூ.36) மற்றும் செடி முருங்கை உண்மை நிலை விதை 23 கிலோ (கிலோ ரூ.3000) ஆகியவை உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான தரமான நெல் ரகங்கள் மற்றும் செடி முருங்கை விதைகளை நேரில் சென்றோ அல்லது பார்சல் சேவை மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு குமுளூர் வேளாண்மை கல்வி நிறுவன முதல்வர் திருச்சி தொலைபேசி எண் - 9865596205, 7010439150 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com