ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை நடந்தது.
ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
Published on

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 1,572 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.786- க்கும், குறைந்தபட்சமாக ரூ.460-க்கும், சராசரியாக ரூ.720.45-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்து 698 மதிப்பில் பட்டுக் கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com