தரமில்லாத கேன் குடிநீர் விற்பனை: ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் - சுகாதாரத்துறை எச்சரிக்கை

கேன் குடிநீரில் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்புதுறை உரிமம் விவரங்களும் இடம்பெறுவது அவசியம்.
தரமில்லாத கேன் குடிநீர் விற்பனை: ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் - சுகாதாரத்துறை எச்சரிக்கை
Published on

சென்னை,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கேன் குடிநீர் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி சில இடங்களில் தரம் குறைந்த மற்றும் பாதுகாப்பற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதனைத் தடுக்கும் பொருட்டு, தமிழக சுகாதாரத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கேன் குடிநீரில் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு துறை உரிமம் (FSSAI) உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெறுவது அவசியம். மேற்கண்ட விதிகளை மீறி, முறையான தகவல்கள் இல்லாமலோ அல்லது தரமற்ற குடிநீரையோ விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com