சேலம்: வீட்டில் பதுக்கிய 79 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் - 3 பேர் கைது

சிலிண்டர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்: வீட்டில் பதுக்கிய 79 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் -  3 பேர் கைது
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் தேவூர் அருகே பெரமாச்சிப்பாளையத் தில் ஒரு மளிகை கடையில் சமையல் கியாஸ் சிலிண்டர் கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய் யப்படுவதாக சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் நேற்று இரவு பெரமாச்சிப்பாளையத்தை சேர்ந்த சங்கர் (வயது 55) என் பவரது மளிகை கடையில் திடீரென சோதனை செய்தனர்.

அப்போது சங்கர் தனது மளிகை கடை மற்றும் வீட்டில் அரசு அனுமதியின்றி அதிகளவில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற் பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட் டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 சமையல் கியாஸ் சிலிண்டர்கள், 66 வர்த்தக சிலிண்டர்கள் என மொத்தம் 79 சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிலிண்டர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அரசு அனுமதியின்றி கியாஸ் சிலிண் டர்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெரமாச் சிப்பாளையத்தை சேர்ந்த சங்கர், இவருக்கு உதவியாக இருந்த சேலத்தை சேர்ந்த வசந்த், வேன் டிரைவர் பிரபு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத் திய விசாரணையில் சேலத்தில் இருந்து வசந்த், பிரபு ஆகியோர் சமையல் கியாஸ் சிலிண்டர்களை விலைக்கு வாங்கி வந்து அதனை சங்கரிடம் கொடுத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் இவர்களுக்கு மொத்தமாக கியாஸ் சிலிண்டர்கள் கிடைத்தது எப்படி? என்பது குறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரான் மீது அமெ ரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தேவூர் அருகே மளிகை கடையில் 79 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com