சேலம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உதவித்தொகை வழங்குவதாக கூறி தச்சு தொழிலாளியிடம் ரூ.58,000 மோசடி

உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி டிஜிட்டல் முறையில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உதவித்தொகை வழங்குவதாக கூறி தச்சு தொழிலாளியிடம் ரூ.58,000 மோசடி
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த தச்சு தொழிலாளியான ரமேஷ் என்பவரின் மகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மர்ம நபர்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர். மேலும் அவர்கள் அரசு அதிகாரிகள் போல் நடித்து காணொலி அழைப்பும் மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் உதவித்தொகையை அனுப்புவதற்காக வங்கி விவரங்களை தருமாறு கேட்டுள்ளனர். இதனை நம்பி ரமேஷ் தனது வங்கி விவரங்களை கொடுத்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து 58 ஆயிரம் ரூபாயை அந்த நபர்கள் தங்களது கணக்கிற்கு மாற்றிவிட்டு, தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளனர்.

தனது பணம் பறிபோனதை அறிந்த ரமேஷ், இது குறித்து சேலம் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு உதவித்தொகை அல்லது கடன் வழங்குவதாக வரும் போலி அழைப்புகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com