சேலம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோனூர் ஊராட்சியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 25). கூலி தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் பெங்களூருக்கு வேலைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஆண்டு கலையரசன், அந்த சிறுமியை அழைத்து வந்து மேட்டூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் ராமன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து காதலர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமி பிரசவத்திற்காக கடந்த 6-ந் தேதி ஈரோடு அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து மேட்டூர் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிறுமியை கர்ப்பமாக்கிய கலையரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com