சேலம்: வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி சிக்கிய சிறுவர்கள்

வந்தே பாரத் ரெயில் மீது கற்களை விசிய 8 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
சேலம்: வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி சிக்கிய சிறுவர்கள்
Published on

சேலம்,

கோவை-சென்னை சென்டிரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (20644) கடந்த மாதம் 28-ந் தேதி வீரபாண்டி ரோடு- சேலம் ரெயில் நிலையங்க ளுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் கல் வீசியதில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சி-1 பெட்டியில் இருந்த அவசரக்கால ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமானது. ஆனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து சேலம் கோட்ட பாதுகாப்பு படை கமிஷனர் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசியது அந்த பகுதியை சேர்ந்த 8 சிறுவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த சிறுவர்களை பிடித்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறுவர்கள் 8 பேரையும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com