கோவை-சேலம் பயணிகள் ரெயில் நேரம் மாற்றம்

கோவை-சேலம் பயணிகள் ரெயில் நேரம் மாற்றம்
கோவை-சேலம் பயணிகள் ரெயில் நேரம் மாற்றம்
Published on

திருப்பூர்

கேவை-சேலம் முன்பதிவில்லா பயணிகள் ரெயில் (எண்.06802) கோவை, வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரெயில் நிலையங்களுக்கு செல்லும் ரெயில் நேரம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் காலை 9.05 மணிக்கும், வடகோவைக்கு 9.12 மணிக்கும், பீளமேடுக்கு 9.19 மணிக்கும், சிங்காநல்லூருக்கு காலை 9.24 மணிக்கும், இருகூருக்கு 9.30 மணிக்கும், சூலூருக்கு 9.37 மணிக்கும் வந்து செல்லும். அதாவது முந்தைய நேரத்தை விட 3 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை தாமதமாக ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com