

சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குறும்பட்டி நாச்சியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஹேமலத்தா என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 18-ந்தேதி கடையில் திடீரன தீ பற்றியதில் 20-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனை செய்யப்படாமல் மீதமிருந்த பட்டாசுகள் எதிர்பாராத விதமாக தீ பிடித்ததாக ஹேமலத்தா தெரிவித்திருந்தார்.
ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் அரிசி மூட்டைகள் மீது மண்ணெண்ணை ஊற்றி ஹேமலத்தாவே தீ வைத்துவிட்டு பின்னர் விபத்து ஏற்பட்டது போல் நாடகம் ஆடியதாக தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஹேமலதா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், கைது செய்யப்பட்ட ஹேமலதாவை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.