சேலம் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்; மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை

சேலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வின்பொழுது தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சேலம் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்; மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை
Published on

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி பல உயிர்களை பலி கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு கொசுக்கள் வளர ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறது.

இந்த நிலையில், சேலத்தில் மாநகராட்சி ஆணையாளர் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வின்பொழுது, தனியார் மருத்துவமனை ஒன்று டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com