சேலம், கரூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சேலம், கரூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ஒன்றிணைவோம் வா திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
சேலம், கரூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை,

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக தி.மு.க. சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற செயல் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் உதவி தேவைப்படுவர்கள் 9073090730 என்ற செல்போன் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தந்த மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒன்றிணைவோ வா செயல் திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மாவட்ட வாரியாக தி.மு.க. நிர்வாகிகளிடம் காணொலி காட்சி மூலம் உரையாடி வருகிறார். அதன்படி அவர் நேற்று சேலம், கரூர் மாவட்டத்துக்குட்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது மு.க.ஸ்டாலின் அவர்களிடம், தங்கள் பகுதிகளில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை தி.மு.க. சார்பில் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com