சேலம் கஸ்தூரிபாய் காந்தி பாலம் நூற்றாண்டு விழா

சேலம் கஸ்தூரிபாய் காந்தி பாலம் நூற்றாண்டு விழா நடந்தது.
சேலம் கஸ்தூரிபாய் காந்தி பாலம் நூற்றாண்டு விழா
Published on

சேலம் டவுன் வாசவி மகால் முதல் ஈஸ்வரன் கோவில் இடையே கடந்த 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரி பாய் காந்தி திறந்து வைத்து உள்ளார். இதையடுத்து கஸ்தூரிபாய் காந்தி பாலம் என்று பெயர் வைக்கப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது. பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டு முடிவடைந்து உள்ளது. தொடர்ந்து சேலம் வரலாற்று சங்கம், ஜாமியா மஸ்ஜித் அறக்கட்டளை ஆகியவை இணைந்து கஸ்தூரிபாய் காந்தி பாலம் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கெண்டாடப்பட்டது.

இதில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி கலந்து கொண்டு நூற்றாண்டு விழா நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கல்வெட்டுக்கு மலர் தூவினர். விழாவில் ஜாமியா மஸ்தித் நிர்வாகி அன்வர், சேலம் வரலாற்று சங்க தலைவர் பர்ணபாஸ், சமூக ஆர்வலர் ஈசன் எழில் விழியன், வரலாற்று ஆய்வாளர் ஏ.டி.மோகன் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள், பாலம் கட்டி தந்த கிருஷ்ணதாஸ் தலைமுறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com