

சேலம்,
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற ஆம்னி பஸ், சேலம் கொண்டாலம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.