

சேலம்,
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 23), பெயிண்டர். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அதே பகுதியில் சிறுமியுடன் வாடகை வீட்டில் ரஞ்சித் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் சிறுமி 3 மாதம் கர்ப்பமானதை அடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுமியை பரிசோதித்த அரசு டாக்டர் குழந்தை திருமணம் செய்து கொண்ட ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி சிறுமியை குழந்தை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய ரஞ்சித் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.