சேலம் ரெயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் ரெயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
சேலம் ரெயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் ரெயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

நாடு முழுவதும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் வசிக்கும் வெளியூர்களை சேர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டு செல்கிறார்கள்.

பொதுமக்கள் வசதிக்காக சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மதியம் முதல் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் இரவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்களில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் ஒருவரையொருவர் முண்டியடித்து ஏறினர்.

ரெயில் நிலையம்

மேலும் பல பஸ்களில் இருப்பதற்கு இடம் கிடைக்காததால் பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தததை பார்க்க முடிந்தது. இதனிடையே தீபாவளி பொருட்கள் வாங்கவும், வெளியூர்களுக்கு செல்லவும் பொதுமக்கள் குவிந்ததால், புதிய பஸ்நிலையம், 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றது.

பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சேலம் வழியாக வெளியூர்களுக்கு சென்ற ரெயில்களிலும் நேற்று மாலை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் அதிகளவில் பயணிகள் பயணம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com