சேலம்: காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாந்த்
Published on: 

சேலம்,

ஏற்காட்டில் காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

காதலி இறந்த சோகம்

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே தலைச்சோலை கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ஸ்ரீகாந்த் (வயது 19). இவர் ஏற்காட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்தின் காதலி உயிரிழந்தார்.

காதலி இறந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் ஸ்ரீகாந்த் கடந்த சில நாட்களாகவே கடுமையான மன உளைச்சலிலும். சோகத்திலும் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் ஸ்ரீகாந்த் தனக்கு சோடா வாங்கி வருமாறு தாய் புஷ்பராணியிடம் கூறி அவரை கடைக்கு அனுப்பியுள்ளார்.

தற்கொலை

இதையடுத்து சிறிது நேரத்தில் தனது அறையில் ஸ்ரீகாந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த ஸ்ரீகாந்தின் பாட்டி கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஏற்காடு போலீசார் விரைந்து வந்தனர்.

பின்னர் ஸ்ரீகாந்த் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்காடு அருகே காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com