சேலம்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறித்த வாலிபர் கைது

சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
சேலம்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணம் பறித்த வாலிபர் கைது
Published on

சேலம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் உடையார் காலனி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 41). இவர், தனது குடும்பத்தினருடன் மராட்டிய மாநிலம் மந்தராலயம் கோவிலுக்கு சென்றுவிட்டு குர்லா-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, தர்மபுரியை கடந்து சேலம் நோக்கி நேற்று அதிகாலை ரெயில் வந்தபோது, கனகராஜின் மனைவியிடம் இருந்து ஒருவர் ஹேண்ட்பேக்கை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.

இதனை கவனித்த கனகராஜ் சக பயணிகளின் உதவியுடன் அந்த நபரை பிடித்து சேலம் ஜங்ஷன் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர், கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தை சேர்ந்த தேவராஜ் (23) என்பதும், ரெயிலில் வந்தபோது கனகராஜின் குடும்பத்தினரிடம் நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து தேவராஜ் மீது சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com