சலூன் கட்டணம் 1-ந்தேதி முதல் உயர்வு; முடித்திருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் அறிவிப்பு

ஜனவரி 1-ந்தேதி முதல் சலூன் கட்டணம் உயர்கிறது. தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தின் (முடிதிருத்தும் தொழிலாளர்கள்) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணாநகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
சலூன் கட்டணம் 1-ந்தேதி முதல் உயர்வு; முடித்திருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் அறிவிப்பு
Published on

சென்னை,

கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் எம்.நடேசன், பொதுச்செயலாளர் கம்பம் ஏ.ராஜன், பொருளாளர் எஸ்.குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தலைமை நிலைய செயலாளர் ஜி.சதாசிவம், மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.கே.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பொன்னுசாமி, வி.ஆனந்தன், எஸ்.ரவிச்சந்திரன், டி.எம்.அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அழகு சாதன பொருட்கள் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வு காரணமாக முடி வெட்டுதல் உள்ளிட்ட சலூன் கட்டணங்களை உயர்த்தி முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி உயர்த்தப்பட்ட கட்டணங்கள் வருமாறு:-

முடிதிருத்தல்(முடி வெட்டுதல்) மற்றும் முகமழித்தல் (ஷேவிங்) கட்டணம் ரூ.220, முடி வெட்டுதல் மட்டும் ரூ.160, ஷேவிங் மட்டும் ரூ.100, ஸ்பெஷல் ஷேவிங் ரூ.120, சிறுவர்கள் முடி வெட்டுதல் ரூ.130, சிறுமி முடி வெட்டுதல் ரூ.140, தாடி ஒதுக்குதல் ரூ.120, தலை கழுவுதல் ரூ.100, முடி உலர்த்துதல் ரூ.100, தலை ஆயில் மசாஜ் ரூ.300 முதல், வெள்ளை முடி கருப்பாக்குதல்(டை) ரூ.350 முதல், பேஸ் பிளிச்சிங் ரூ.500 முதல், பேஷியல் ரூ.1,200 முதல் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு வருகிற ஜனவரி 1-ந்தேதி(புதன் கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று முடித்திருத்தும் தொழிலாளர் சமூக நலச்சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com