இட ஒதுக்கீட்டு போராளிகளுக்கு வீரவணக்கம்

இட ஒதுக்கீட்டு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இட ஒதுக்கீட்டு போராளிகளுக்கு வீரவணக்கம்
Published on

கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு 21 பேர் இறந்தனர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பா.ம.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். அந்தவகையில், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உயிர்நீத்த 21 தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர்தூவி வீர வணக்கம் செலுத்தியதோடு, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com