திருவாரூரில் கனமழையால் நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை

வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாத காரணத்தால் விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூரில் கனமழையால் நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை
Published on

திருவாரூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

குறிப்பாக நன்னிலம் அருகே உள்ள கிராமப் பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாத காரணத்தால் விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதாகவும், இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com