சாம்பார் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி

பெரிய வெங்காயம் கிலோ ரூ. 40 முதல் ரூ.50 வரை விற்பனையானது
சாம்பார் வெங்காயம் விலை கிடுகிடுவென விலை உயர்வு
Published on: 

ஈரோடு,

சாம்பார் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயம் விலை உயர்வு

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தை வியாழக்கிழமைதோறும் நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு,கோவை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ 150 வரையிலும் விற்பனையானது. கடந்த சில வாரங்களாக ரூ.70 -க்கு விற்பனை செய்து கொண்டிருந்த சின்ன வெங்காயம் தற்போது படிப்படியாக உயர்ந்து ரூ. 150 -க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் சின்ன வெங்காயத்தை வாங்குவதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டது. அதே சமயம் பெரிய வெங்காயம் கிலோ ரூ. 40 முதல் ரூ.50 வரை விற்பனையானது. மழை இல்லாததால் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதாலும், தீபாவளி நெருங்குவதால் சின்ன வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதனால் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 150 உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com