மீஞ்சூரில் சாமி சிலைகள் உடைப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மீஞ்சூரில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
மீஞ்சூரில் சாமி சிலைகள் உடைப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

மீஞ்சூர், 

மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டிய பிரகாரத்தில் ஸ்ரீ நார்த்தனகணபதி, யோகதட்சணாமூர்த்தி உள்பட பல்வேறு சாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஸ்ரீ நார்த்தகணபதி, யோகதட்சணாமூர்த்தி மூலவர் கல் சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து கோவில் பூசாரி மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் செய்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதைபோல திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. நேற்று கோவிலை சுத்தம் செய்ய பக்தர்கள் வந்தபோது கோவிலில் உள்ள நகுலன், பீமன், விஷ்ணு, கருட வாகன சாமி சிலைகள் உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே கோவிலில் உண்டியல் திருடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தாழவேடு கிராமத்தில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com