காமதேனு வாகனத்தில் சாமி வீதிஉலா

குளுந்தமா காளியம்மன் கோவிலில் காமதேனு வாகனத்தில் சாமி வீதிஉலா
காமதேனு வாகனத்தில் சாமி வீதிஉலா
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலச்சேரியில் புகழ்பெற்ற குளுந்தமா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பெரும் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் சாமி வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com