நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சாமி வீதிஉலா

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சாமி வீதிஉலா
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சாமி வீதிஉலா
Published on

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. குடமுழுக்கு நடந்து ஓராண்டு பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் சிறப்பு ஹோமம், புனித நீர் நிரப்பப்பட்ட 108 கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சீதா, லெட்சுமண அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இரவு சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com