மணல் கடத்தியவர் கைது

ஆம்பூர் அருகே மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மணல் கடத்தியவர் கைது
Published on

ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் தாலுகா போலீசார் நேற்று மின்னூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தனர். போலீசாரை கண்டதும் அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் பிடிபட்டார்.

விசாரணையில் அவர் ஆம்பூர் மாங்காதோப்பு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 47) என்பதும், மாட்டு வண்டியில் மணல் கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து மணலுடன் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com